கட்டுரைகள்
Sunday, 10 October 2010
Thursday, 15 July 2010
பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவ ஒரு கருவி.
Wednesday, 16 June 2010
மாநிலம் தழுவிய மாநாடு
Friday, 11 June 2010
உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர். திரு. ஏகலைவன்
Thursday, 10 June 2010
விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்
இவர் மாற்றுத்திறனுடையோரின் முன்னேற்றத்திற்கு செய்துவரும் முயற்சிகளையும் தமிழ் மோழிக்கு அற்றிவரும் சேவைகளையும் பாராட்டி பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கெள்ளாம் சிகரம் வைத்தார்போன்று எதிர்வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில் உரையாற்ற இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. (தலைப்பு : மாற்றுத்திறனுடையோர் பதிவேற்றி நடத்தும் தமிழ் வலைப்பதிவுகள் - பற்றி). இது தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கெளரவமாகவே நினைக்கத்தோன்றுகிறது.
இந்த அளவிற்கு பேரும் புகழுடன் விளங்கும் திரு.ஏகலைவன் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த வறுமையுடையது. தனது தனிப்பட்ட வாழ்வில் வறுமை தான்டவமாடினாளும் தான் தமிழுக்கும் மாற்றுத்திறன் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை இவர் சிறிதும் தொய்வின்றி செய்துவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது.
அதற்கு சான்று கடந்த சனவரி மாதம் இவர் தனது வாசகன் பதிப்பகம் மூலம் பாள்ளாயிரம் ரூபாய் பொருட்செலவில் வெளியிட்ட கவிச்சிதரல் மற்றும் மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள் என்ற நூல்கள்.
கவிதைத்தொகுப்பு நூலான "கவிச்சிதறல்" இன் முதல் பிரதியினை பிரபல எழுத்தாளர் திரு.லேணா.தமிழ்வாணன் அவர்கள் வெளியிட சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் திரு.அத்தியண்ணா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
மாற்றுத்திறனாளர்களில் சாதனைபுரிந்தவர்களை உலகிற்கு வெளிப்படுத்தி வெளிச்சமிட்டக் காட்டும் "மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்" நூலின் முதல் பிரதியினை உரத்த சிந்தனை இதழ் ஆசிரியர் திரு.உதயம். ராம் அவர்கள் வெளியிட கோடைபண்பலை வானொலியின் நிகழ்ச்சி பொருப்பாளர் திருவரங்கம் திரு.முரளி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.
இவரது வலைப்பதிவுகள்
1) கவிஞர் ஏகலைவன்
2) பீனிக்ஸ் மனிதர்கள்
3) வாசகன் பதிப்பகம்
(குறிப்பு: மேற்கண்ட வலைதளங்களை பார்க்க விரும்புவோர் அந்தந்த வலைதளங்களின் மீது சொடுக்கவும்)
இவரது படைப்புகள்:

கவிச்சிதறல்
விலை ரூபாய் 55.00 மட்டும்
பக்கங்கள் 128
மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்
விலை ரூபாய் 50.00 மட்டும்
பக்கங்கள் 184
கல்விச்செல்வம்
விலை ரூபாய் 6.00 மட்டும்
பக்கங்கள் 40
பயண வழிப்பூக்கள்
விலை ரூபாய் 30.00 மட்டும்
பக்கங்கள் 64
பதிப்பில் இருப்பவை (விரைவில் வெளியிடப்படும்)
1) செந்தமிழே வணக்கம்,
விலை ரூ.8.00 மட்டும்
40 பக்கங்கள்
2) பெண்மையைப் போற்றுவோம்
விலை ரூ.8.00 மட்டும்
40 பக்கங்கள்
தொடர்புக்கு:
கவிஞர் ஏகலைவன்,
வாசகன் பதிப்பகம்,
11/96 சங்கிலி ஆசாரி நகர்,
சன்யாசி குண்டு,
சேலம் - 636 015.
செல்லிட பேசி: 9842974697, 9944391668.
Thursday, 27 May 2010
உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

-
பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்துக்கு உள்ளேயே காலங் காலமாகத் திருமணம் செய்து கொள்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மன நலம் குன்றிய பிள்ளைகள் பிறக்கின்றனர். -
நகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், உடல் கோளாறு போன்றவை வராமல் நோய்த் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றுடன் பிறக்கின்றன. அவர்களைக் கவனிக்காததால் நாணமுற்று, உடல் கூனி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலருக்குப் பருவ வயதைக் கடந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் திருமணம் செய்யா நிலை தொடர்கிறது. -
காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் பார்வையற்றோர் போன்ற பலர், செயற்கை முறையில் அந்தத்திறனைக் கொடுக்கக்கூடிய கருவிகள் வாங்கிப் பொருத்திக் கொள்ள வசதி இல்லாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிறரின் தொடர் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளாகி ஒன்றும் செய்ய முடியாமல் குன்றிப்போய் கிடக்கின்றனர். -
இன்றைய நவீன உலகில் சிகிச்கை செய்ய முடியா நோயே இல்லலையெனலாம். ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சிறந்த உதவிகளை முஸ்லிம் அமைப்புகள் செய்ய வேண்டும். -
ஒருவரது ஊனத்தைச் சுட்டிக் காட்டும் கேலிப் பேச்சுகளையும் ஊனப் பெயரால் ஒருவர் விளிக்கப் படுவதையும் ரஸூலுல்லாஹ் (ஸல்) கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இருந்தும் பல ஊர்களில் ஒருவருடைய ஊனத்தினைச் சொல்லி அழைப்பதை இன்றும் காணலாம். அதனை முதலில் நிறுத்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் நிலையில் நாம் இருந்தால் நம் மனம் எப்படிப் புண்படும் என்று நினைக்க வேண்டும். அதற்கான பரப்புரை மேற்கொள்ள வேண்டும். -
முஸ்லிம் இயக்கங்கள் மாற்றுத்திரனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அரசு உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டும். -
மக்களுக்குத் தொண்டு செய்வதே மகேசனான அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
Sunday, 20 September 2009
நண்பர்களுக்கு அழைப்பு
இந்த சாதனையாளரை பாராட்டுவதுடன் இத்திரைப்படத்தை நாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை கண்டு ரசிப்பதுடன் நசிர்கான் போன்ற சாதனையாளர்களுக்கு ஊக்கம் அளிப்போம் என இந்த இணையதளம் மூலம் நண்பர்களே உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.
இப்படிக்கு
R. பாக்கியராஜ்

திரு R. பாக்கியராஜ் பற்றிய விவரக்குறிப்பு
பெயர் : இரா. பாக்கியராஜ்
கல்வித்தகுதி : இளங்கலை வரலாறு
வயது : 25
பெற்றோர் : P. ராஜு, R. அன்புச்செல்வி
முகவரி : கொடியாலம், திருச்சி.
பிற விவரங்கள்:
இளமையிலேயே கண் பார்வை குறைபாடு உடைய நான் பள்ளிக் கல்வியை திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். பிறகு I.T.I புக் பைண்டிங் பிரிவில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அரசு கிளை அச்சகம் திருச்சி-15 ல் புக் பைண்டிங் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகின்றேன்.
ஆர்வம்:
நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதும் அது சார்ந்த தகவல்களை சேகரிப்பதும் எனக்கு பிடித்தமான ஒரு செயலாகும். தமிழ் இலக்கிய, உரைநடை, ஒலி நாடகங்களை கேட்பதும் ஊனமுற்ற சிலருக்கு இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பில் இணைந்து என்னால் முடிந்த உதவிகளை செய்வதும் எனது கடமையாக செய்து வருகின்றேன். நான் இந்த அளவிற்கு தமிழ் மீதும் நம் நாட்டு மக்கள் மீதும் அக்கறையுடன் நடந்து கொள்ள என்னை துண்டியவர் எனது மரியாதைக்குரிய நண்பர் திரு மணியன் அவர்களாவர். மொழிப்பற்று, நாட்டுப்பற்று உடன் நாம் இருக்கவேண்டும் நம்மால் முடிந்ததை ஊனமுற்றோற்கும் மற்றவர்க்கும் செய்யவேண்டும் என்று கூறியதுடன் தானும் அவரே வாழ்ந்து வருகின்றார். அவரை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டு வருகின்றேன்.
வாழ்க பாரதம்.