Thursday 15 July 2010

பார்வையற்ற குழந்தைகளுக்கு உதவ ஒரு கருவி.

22 ஜீலை 2010ம் தேதிய புதிய தலைமுறை வார இதழில் வெளிவந்த ஒரு கட்டுரை.

                 பார்வைத் திறனற்ற குழந்தைகள் பாதையில் ஒளி விளக்காய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ஒரு கருவி.  பெயர் விழிவழங்கி.  இதனைக் கண்டுபிடித்திருப்பவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகக் கணிணிப் பேராசிரியை அமுதா. இதன் செயல்பாடுகளை அவரே விளக்குகிறார்.

Wednesday 16 June 2010

மாநிலம் தழுவிய மாநாடு

  அர்ப்பணிப்பு உணர்வோடும், சேவை மனப்பாங்குடனும் அரசுப்பணியாற்றிவரும் ்மாற்றுத்திறனாளித் தோழர்களே! நண்பர்களே! உங்கள் அனைவருக்கும் ஓர் நற்செய்தி!

          மாற்றுத்திறனாளிகளாகிய நாம், நமது பணியினை பிறரைப்போலவே திறம்படவும், பிறரைவிடப் பொறுப்புணர்வுடனும் அனைத்து சூழ்நிலைகளிலும் செவ்வனே செய்து வருகின்றோம். இருப்பினும் நமக்கென அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ள சிறப்பு சலுகைகளை நாம் முழுமையாகப் பெறுவதில் உள்ள சிக்கல்களை, நாமே முயன்று தீர்த்துக்கொள்ளும்

Friday 11 June 2010

உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர். திரு. ஏகலைவன்

எதிர்வரும் உலகத்தமிழ் மாநாட்டில் நமது கவிஞர் திரு.ஏகலைவன் அவர்கள் பங்குபெற நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களால் அழைக்கப்பட்டுள்ளார். அதில் மாற்றுத்திறனாளர்களால் நிர்வகிக்கப்படும் வலைப்பதிவுகள் குறித்து அவர் உறையாற்றவுள்ளார்.

அவருக்கு உதவிடும்பொருட்டு இதனை படிக்க வாய்ப்பு கிடைக்கும் அனைவரும் தங்களுக்குத் தெரிந்த மாற்றுத்திறனாளர்கள் நடத்திவரும் அனைத்து வலைப்பதிவுகளைப்பற்றியும் இதற்கு முந்தைய பதிவில் வழங்கப்பட்டுள்ள கவிஞர் திரு.ஏகலைவன் அவர்களுக்கு தெரிவித்துதவும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Thursday 10 June 2010

விருதுகள் பல வெண்ற கவிஞர் திரு.ஏகலைவன்

சேலத்தைச் சொந்த ஊராகக்கொண்டு 1975 ஆம் ஆண்டு பிறந்த இவர்,தனது 13வது வயதில் நிகழ்ந்த ஒரு இரயில் விபத்தால் உடல் ஊனமடைந்தபோதிலும் தற்போது சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். கவிதைகள், நேர்காணல்கள், கட்டுரைகள் (தன்னம்பிக்கைக் கட்டுரைகள், இலக்கியக் கட்டுரைகள்) என்று தனது படைப்புகள் மூலமாக தமிழ் இலக்கிய வட்டத்தில் வலம் வரும் இவர் பல்வேறு இதழ்களில் படைப்புகளை எழுதி வருவதோடு, வாசகன் பதிப்பகம் என்னும் பதிப்பகத்தை நிறுவி, பதிப்பாளராகவும் இயங்கி வருகிறார். 

தனது முதல் நூலான "பயணவழிப் பூக்கள்" கவிதைத் தொகுப்பை 2004 இல் வெளியிட்டுள்ளார். தொடர்ந்து "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 1)", "சாதனை படைக்கும் ஊனமுற்றவர்கள் (பாகம்‍‍ 2)'', ஊனமுற்றோரின் உயரிய சாதனைகள், சாதிக்கும் ஊனமுற்ற பெண்கள் போன்ற தொகுப்புகளின் வாயிலாக ஊனமுற்றோரின் சாதனைகளை புத்தகங்களாக்கி இருக்கிறார். "கல்விச் செல்வம்" என்ற கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ள இவர், மாற்றுத்திறன் கொண்டோரின் படைப்பாற்றலை வெளிக்கொணரும் வகையில், தமிழகம் முழுவதிலுமான‌ 44 மாற்றுத்திறனாளர்களின் கவிதைகளை தொகுத்து ''கவிச்சிதறல்'' என்னும் கவிதைத் தொகுப்பையும், 8 மாற்றுத்திறன் சாதனையாளர்களின் சாதனைப் பதிவுகள் அடங்கிய "மாற்றுத்திற‌ன் சாதனைச் சிகரங்கள்" என்னும் கட்டுரைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்.

இவர் மாற்றுத்திறனுடையோரின் முன்னேற்றத்திற்கு செய்துவரும் முயற்சிகளையும் தமிழ் மோழிக்கு அற்றிவரும் சேவைகளையும் பாராட்டி பல அமைப்புகள் இவருக்கு பல விருதுகளை வழங்கி கெளரவப்படுத்தியுள்ளது. இதற்கெள்ளாம் சிகரம் வைத்தார்போன்று எதிர்வரும் தமிழ் செம்மொழி மாநாட்டில்  உரையாற்ற இவருக்கு வாய்ப்பு தேடி வந்துள்ளது. (தலைப்பு : மாற்றுத்திறனுடையோர் பதிவேற்றி நடத்தும் தமிழ் வலைப்பதிவுகள் - பற்றி). இது தமிழக அரசு இவருக்கு வழங்கியுள்ள மிகப்பெரிய கெளரவமாகவே நினைக்கத்தோன்றுகிறது.

இந்த அளவிற்கு பேரும் புகழுடன் விளங்கும் திரு.ஏகலைவன் தனிப்பட்ட வாழ்க்கை மிகுந்த வறுமையுடையது.   தனது தனிப்பட்ட வாழ்வில் வறுமை தான்டவமாடினாளும் தான் தமிழுக்கும் மாற்றுத்திறன் மக்களுக்கும் செய்துவரும் சேவைகளை இவர் சிறிதும் தொய்வின்றி செய்துவருவது மிகவும் பாராட்டுதளுக்குறியது.

அதற்கு சான்று கடந்த சனவரி மாதம் இவர் தனது வாசகன் பதிப்பகம் மூலம் பாள்ளாயிரம் ரூபாய் பொருட்செலவில் வெளியிட்ட கவிச்சிதரல் மற்றும் மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள் என்ற நூல்கள்.

 கவிதைத்தொகுப்பு நூலான "கவிச்சிதறல்" இன் முதல் பிரதியினை பிரபல எழுத்தாளர் திரு.லேணா.தமிழ்வாணன் அவர்கள் வெளியிட சேலம் மாவட்ட உடல் ஊனமுற்றோர் நல்வாழ்வு சங்கத்தலைவர் திரு.அத்தியண்ணா அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.


 மாற்றுத்திறனாளர்களில் சாதனைபுரிந்தவர்களை உலகிற்கு வெளிப்படுத்தி வெளிச்சமிட்டக் காட்டும் "மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்" நூலின் முதல் பிரதியினை உரத்த சிந்தனை இதழ் ஆசிரியர் திரு.உதயம். ராம் அவர்கள் வெளியிட கோடைபண்பலை வானொலியின் நிகழ்ச்சி பொருப்பாளர் திருவரங்கம் திரு.முரளி அவர்கள் பெற்றுக்கொள்கிறார்.

இவரது வலைப்பதிவுகள்
1) கவிஞர் ஏகலைவன்
2) பீனிக்ஸ் மனிதர்கள்
3) வாசகன் பதிப்பகம்


(குறிப்பு: மேற்கண்ட வலைதளங்களை பார்க்க விரும்புவோர் அந்தந்த வலைதளங்களின் மீது சொடுக்கவும்)

இவரது படைப்புகள்:

வாசகன் பதிப்பகம்


கவிச்சிதறல்
விலை  ரூபாய் 55.00 மட்டும்
பக்கங்கள் 128









மாற்றுத்திறன் சாதனைச்சிகரங்கள்
விலை ரூபாய் 50.00 மட்டும்
பக்கங்கள் 184









கல்விச்செல்வம்
விலை ரூபாய் 6.00 மட்டும்
பக்கங்கள் 40







பயண வழிப்பூக்கள்
விலை ரூபாய் 30.00 மட்டும்
பக்கங்கள் 64







பதிப்பில் இருப்பவை (விரைவில் வெளியிடப்படும்)
1) செந்தமிழே வணக்கம்,
                   விலை ரூ.8.00 மட்டும்
                   40 பக்கங்கள்

2) பெண்மையைப் போற்றுவோம்
                   விலை ரூ.8.00 மட்டும்
                   40 பக்கங்கள்


தொடர்புக்கு:
கவிஞர் ஏகலைவன்,
வாசகன் பதிப்பகம்,
11/96 சங்கிலி ஆசாரி நகர்,
சன்யாசி குண்டு,
சேலம் - 636 015.
செல்லிட பேசி: 9842974697, 9944391668.

Thursday 27 May 2010

உன்னையறிந்தால் நீ உலகத்தில் போராடலாம்

மனிதனோட பலம் எதிலே? தன் நம்பிக்கையிலே!
தமிழகத்தில் மாற்றுத்திறனுடையோருக்குத் தனித்துறை ஏற்படுத்தி, அதனைத் தமிழக முதல்வர் தனிக்கவனம் செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்பது மிகவும் பாராட்டத்தக்கது. மாற்றுத்திறன் உடையோர் என்பதில் உடல் ஊனமுற்றோர், பார்வையிழந்தோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல் வளர்ச்சி குன்றியோர் போன்றோர் அடங்குவர்.
சாதாணமாக மேற்கண்ட உடல் பாதிப்புக்கான காரணங்கள் பிறவியிலோ, நோயினாலோ, விபத்தாலோ, பரம்பரை (ஜெனி) கோளாறு ஆகியவற்றுள் ஒன்றாக இருக்கலாம். ஆனால், குறையுடையவர்கள் வாழ்வில் முடங்கி விடக்கூடாது என்பதை வலியுறுத்தவே இந்தக் கட்டுரையை உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
மேற்காணும் குறையுடையோரை நம் அன்றாட வாழ்வில் சந்தித்தாலும் அவர்களுடைய நிஜவேதனையைப் பற்றி ஆழ்ந்து சிந்திப்பதில்லை. "தலைவலியும் திருகுவலியும் தனக்கு வந்தால்தான் தெரியும்" என்பது தமிழில் வழக்கத்திலுள்ள ஒரு சொலவடை.
எனக்கு அப்படி ஒரு வலி வந்தது!
நான் புதுக்கல்லூரி மாணவனாக 1967ஆம் ஆண்டில் கல்லூரி விடுதியில் தங்கி இருந்தேன். அப்போது ஒருநாள் மாலை நேரம் நண்பர்களுடன் பேச்சு வாக்கில் ஒரு போட்டி எழுந்தது. அதாவது மேல்மாடியிலிருந்து கால் செருப்புடன் கீழே குதித்தால் அரைரூபாய் தருவதாகச் சொன்னார்கள். நான் துணிந்து அந்தச் சவாலை ஏற்றுக் கொண்டு தோல்செருப்புடன் கீழே குதித்தேன். குதித்த பின்பு என்னால் நடக்க முடியவில்லை. உடனே நண்பர்கள் என்னை சென்னை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு காரில் அழைத்துச் சென்றார்கள். விபரங்களைக் கேட்டுக் கொண்டே பரிசோதித்த டாக்டர், 'அரை ரூபாய் பந்தய'த்தைக் கேட்டுவிட்டு, "பயித்தியக்காரத்தனப் பந்தயம்" என்று சொல்லி, இரண்டு கால் முட்டிக்குக் கீழே கரண்டைக்கால்வரை கனமான ‘பிளாஸ்டர் ஆப் பேரிஸ்’ பேண்டேஜ் போட்டு அனுப்பினார்.
ஆனால் அதன் பின்புதான் நிஜமான சோதனை ஆரம்பித்தது. அப்போது வெஸ்டர்ன் கிளாசட் டாய்லட் என்பதெல்லாமில்லை. எனக்கு டாய்லெட் போகவேண்டும் என்றால் என் நண்பர்கள் அஜ்மல்கான், அபுதாகிர் போன்றோர் என்னைச் சுமந்து கொண்டு டாய்லட்டிற்குச் கூட்டிச் சென்று பின்பு அழைத்து வரும் சிரமம் சொல்லமுடியாது. ஆகவே கால் ஊனம் என்றால் எப்படியிருக்கும் என்று அப்போது உணர்ந்தேன். அதன் பின்பு என் கல்லூரித் தோழன் நாமக்கல் மாவட்டம் சின்னக்கரிசல் பாளையம் முத்துசாமி எனும் பெயருடைய கால் ஊனமுற்றவரை என் அறை நண்பராக எடுத்துக் கொண்டு இரண்டாண்டுகள் அவருக்குச் சில சேவைகள் செய்தேன். அது, ஊனத்தை அனுபவத்தால் உணர்ந்ததன் வெளிப்பாடு. அந்த நண்பர் இன்றும் சென்னை வந்தால் என்னைப் பார்க்காமல் செல்லமாட்டார்.
உழைக்கும் கால்கள்இதுபோன்று மாற்றுத்திறன் உள்ளவர்களுக்கு மனிதாபிமானம் கூடிய நல்ல நண்பர்கள்/ஆலோசகர்கள் அமைவதும் ஆங்காங்கே நடந்து கொண்டுதானிருக்கிறது. அதில் ஒரு செய்தியினை உங்களுக்குச் சொல்லலாம் என நினைக்கிறேன். அச்செய்தி, படத்துடன் இங்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னை குளத்தூர் பகுதியைச் சார்ந்த 33 வயதான முஹம்மது ஹுசைனுக்கு 22 வயதுவரை வாழ்க்கை இருட்டறையாக இருந்தது.
ஏன்?
அவருக்குப் பிறவியிலே இரண்டு கைகளும் இல்லை. ஆகவே தன் வீட்டின் நான்கு சுவர்களுக்குள்ளே முடங்கிக் கிடந்தார். அவருக்கு விடிவுகாலம் அவருடைய நண்பர் சந்தோஷ் வடிவில் வந்தது.  சந்தோஷ் தன் நண்பனான ஹுசைனைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு, ஊனமுற்றோர் பலர் எப்படி அவர்தம் வாழ்க்கையில் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நேரடியாகக் காட்டினார். அவர்களையெல்லாம் பார்த்த ஹுஸைனுக்குத் தன்னம்பிக்கை துளிர் விட்டது. அவர்கள்போல தானும் முன்னேற வேண்டுமென்று ஆவல் உந்தியது. ஹுஸைனின் அண்ணன் சாகுல் ஹமீது செல்ஃபோன் ரிப்பேர் கடை நடத்திக் கொண்டிருக்கிறார். அண்ணனின் கடையில் ரிப்பேருக்கு வந்த செல்ஃபோன்களை, இறைவன் கொடுத்த இரண்டு கால்களில் உள்ள பத்து விரல்களைக் கொண்டு ரிப்பேர் செய்யும் வித்தையைக் கற்றுக் கொண்டார் ஹுஸைன். கடந்த பதினொரு ஆண்டுகளாக அவர் தன் சிரித்த முகத்துடன் செல்ஃபோன் ரிப்பேர் எனும் கருமமே கண்ணாக மட்டும் இருக்கவில்லை. மாறாக, தன்னைப் போன்றே ஊனமுற்ற பதின்மரை உறுப்பினராகக் கொண்டு, 'லட்சியப்பாதை' எனும் ஓர் அமைப்பையும் தோற்றுவித்தார்.
'லட்சியப் பாதை'யின் லட்சியம் என்னெவென்றால், முதலில் ஊனமுற்றோருக்குத் தன்னம்பிக்கை ஏற்படுத்துவது. அடுத்து, மற்றவர்களைப்போல் 'இருப்பதைக் கொண்டு' உழைத்துவாழ வழிவகைகள் ஏற்படுத்துவது. பதினொரு ஆண்டுகளுக்கு முன்னர், தன்னால் எதுவும் செய்ய இயலாது என்று வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த முஹம்மது ஹுஸைனின் தன்னம்பிக்கையும் பிறரைப்போல் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் எனும் உத்வேகமும் நமக்கு வியப்பை அளிக்கிறதல்லவா?
பிரபல பிரிட்டிஷ் எழுத்தாளர்-நாடக ஆசிரியர் ஷேக்ஸ்பியர், "கடவுள், உடல் என்ற ஒரு முகத்தினை உனக்குக் கொடுத்திருக்கிறார்; உனக்கு இன்னொரு முகம் வேண்டுமெனில் உன்னுடைய விடாமுயற்சி மூலம்தான் அதை உருவாக்க முடியும்" என்று சொல்கிறார். மயிலுக்கு இறைவன் மிகவும் அசிங்கமான கால்களையும் அழகான தோகையையும் கொடுத்துள்ளான். ஆனால் மயில் தோகையினை எப்போது விரித்து மகிழ்ச்சியில் ஆடுகின்றதோ அப்போதுதான் மயிலின் அழகே வெளியுலகத்திற்குத் தெரியும்.
இன்னொரு குட்டிக்கதையும் சொல்ல ஆசைப்படுகிறேன். ஒரு காட்டில் கலைமான் ஒன்று நீர்ச்சுனையில் நீர் அருந்தச் சென்று, தன் தலையைக் கவிழ்த்தது. அப்போது அதன் அழகான பல கிளைகள் உள்ள கொம்பு நீரில் தெரிய, மான் மிக்க மகிழ்ச்சியடைந்தது. பின்பு குனிந்து தன் கால்களைப் பார்த்தது. அவை ஒல்லியாக இருந்ததைப் பார்த்து மானுக்கு மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அப்போது ஒரு புலி, மானை வேட்டையாட அதன் மீது பாய்ந்தது. உடனே மான் அரண்டு ஓட்டம் பிடித்தது. மானின் மெலிந்த கால்கள் அதற்கு வேகமாக தப்பித்து ஓட உதவி செய்தன. ஆனால் பல கிளைகளையுடைய அதன் கொம்பு, செடி-கொடிகளிடம் அவ்வப்போது சிக்கிக் கொண்டு, மான் வேகமாக ஓடுவதற்குத் தடங்கலாக இருந்தது. அப்போதுதான் மானுக்குப் புரிந்தது, புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்ற உதவியது தன் மெலிந்த அழகில்லாத கால்கள்தாம் என்று. ஆகவே கிடைக்கின்ற அல்லது படைத்த படைப்பினைப் பயன்படுத்தி முன்னேறுவதுதான் புத்திசாலிக்கு அழகு.
வெளிநாட்டு சுற்றுலாப்பயணி ஒருவர் கேரளாவில் உள்ள வர்கலாவிற்குச் சுற்றுலா வந்து 'போட் ஹவுஸில்' தங்கியிருந்தார். இரவில் அவர் பவுர்ணமி நிலவின் அழகினை ரசிக்க வேண்டுமென்று ஆசைப்பட்டார். ஆனால் அவர் போட்ஹவுஸுக்கு உள்ளேயிருந்ததால் நிலா தெரியவில்லை. கொஞ்சம் மேகமாக இருந்ததால் நிலா வரத் தாமதமாகிறதோ என எண்ணினார். தூக்கம் வேறு கண்ணைச் செருகியது. மின் விளக்கினை அணைத்துவிட்டுப் படுக்க நினைத்தார். என்ன ஆச்சரியம்! நிலாவின் வெளிச்சம் அவருடைய போட் ஹவுஸ் ஜன்னல் வழியாக நுழைந்தது. உடனே வெளியே வந்தார் மனதிற்கு இதமான காற்று, சலசலத்து ஓடும் நீருடைய சலங்கை ஒலி, நீருக்கு வெளியே வந்து துள்ளிக் குதிக்கும் மீன்கள், ஆற்றில் நீர் அருந்தும் மான் கூட்டங்கள் என அனைத்தையும் பார்த்து, சுற்றுலாப் பயனை அடைந்தார். ஆகவே மனிதன் தன்னம்பிக்கையிழந்த சூழலிலிருந்து வெளியே வந்தால்தான் வாழ்க்கையில் முன்னேற முடியும்.
வழக்கம்போல் இறுதியான சில சிந்தனைகளும் தீர்வுகளும்:



  1. பெரும்பாலான முஸ்லிம் ஊர்களில் ஒரே குடும்பத்துக்கு உள்ளேயே காலங் காலமாகத் திருமணம் செய்து கொள்வதால் குட்டையான உருவம், கோரமான முகஅமைப்பு போன்ற உடற் கோளாறுகள், மன நலம் குன்றிய பிள்ளைகள் பிறக்கின்றனர்.



  2. நகரத்திலுள்ள மக்கள் குழந்தை பிறக்கு முன்னரும் அதற்குப் பின்னரும் இளம்பிள்ளை வாதம், உடல் கோளாறு போன்றவை வராமல் நோய்த் தடுப்பு ஊசி, மருந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள். அந்த வசதி கிராமங்களில் இல்லாததால் பிறக்கும் குழந்தைகள் இளம்பிள்ளை வாதம் மற்றும் உடல் ஊனம் போன்றவற்றுடன் பிறக்கின்றன. அவர்களைக் கவனிக்காததால் நாணமுற்று, உடல் கூனி வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்படுகிறது. சிலருக்குப் பருவ வயதைக் கடந்து பல ஆண்டுகள் ஆனபிறகும் திருமணம் செய்யா நிலை தொடர்கிறது.



  3. காது கேளாதோர், வாய் பேசாதோர், கண் பார்வையற்றோர் போன்ற பலர், செயற்கை முறையில் அந்தத்திறனைக் கொடுக்கக்கூடிய கருவிகள் வாங்கிப் பொருத்திக் கொள்ள வசதி இல்லாத நிலையில் உள்ளனர். அவர்கள் பிறரின் தொடர் கேலிப் பேச்சுக்களுக்கு ஆளாகி ஒன்றும் செய்ய முடியாமல் குன்றிப்போய் கிடக்கின்றனர்.



  4. இன்றைய நவீன உலகில் சிகிச்கை செய்ய முடியா நோயே இல்லலையெனலாம். ஆகவே மாற்றுத்திறனாளிகளுக்குத் தேவையான சிறந்த உதவிகளை முஸ்லிம் அமைப்புகள் செய்ய வேண்டும்.



  5. ஒருவரது ஊனத்தைச் சுட்டிக் காட்டும் கேலிப் பேச்சுகளையும் ஊனப் பெயரால் ஒருவர் விளிக்கப் படுவதையும் ரஸூலுல்லாஹ் (ஸல்) கடுமையாகக் கண்டித்திருக்கிறார்கள். இருந்தும் பல ஊர்களில் ஒருவருடைய ஊனத்தினைச் சொல்லி அழைப்பதை இன்றும் காணலாம். அதனை முதலில் நிறுத்த மக்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். அவர்கள் நிலையில் நாம் இருந்தால் நம் மனம் எப்படிப் புண்படும் என்று நினைக்க வேண்டும். அதற்கான பரப்புரை மேற்கொள்ள வேண்டும்.



  6. முஸ்லிம் இயக்கங்கள் மாற்றுத்திரனாளிகளை அடையாளம் கண்டு, அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும்.   அரசு உதவிகள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவிகள் அவர்களுக்குக் கிடைக்க வழிவகைகள் செய்ய வேண்டும்.



  7. மக்களுக்குத் தொண்டு செய்வதே மகேசனான அல்லாஹ்வுக்கு மிகவும் விருப்பமானது என்பதை நாம் அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.
இவற்றை இங்குக் குறிப்பிடக் காரணம், சிறிய ஓர் இழப்போ சோதனையோ ஏற்பட்டுவிட்டால்கூட படைத்த இறைவனைத் திட்டுகின்றவர்கள் வாழும் இவ்வுலகில், தன்னைப் படைக்கும்போதே இரண்டு கைகளும் இல்லாமல் படைத்த அல்லாஹ்வை ஐவேளையும் தொழுது நன்றி செலுத்தக்கூடிய ஹுஸைன் போன்றோர் நம் போற்றுதலுக்கும் உதவிகளுக்கும் உரியவர்களல்லவா என் சொந்தங்களே!
-  முனைவர் A.P. முஹம்மது அலீ, M.A, Ph.D, IPS(R)

Sunday 20 September 2009

நண்பர்களுக்கு அழைப்பு

நண்பர்களே இது நம்மைப்போன்ற ஒரு உடல் ஊனமுற்ற நபர் புரிந்த சாதனைகளை விளக்கவும் அது நம் அனைவருக்கும் ஒரு உந்துசக்கதியாக விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இங்கே பதிவுசெய்கின்றேன்.

சினிமாத் துறையில் வாய்ப்பு கிடைப்பதென்பது இன்றிய நிலையில் ஒரு குதிரைக்கொம்பான விசையமாகத்தான் நம் நாட்டில் இருந்து வருகிறது. அதுவும் கதாநாயகன் என்றால் சொல்லவே தேவையில்லை, வாய்ப்புக் கிடைப்பது என்பது எவ்வளவு சிரமம் என்பது உங்களுக்கே தெரியும், அப்படி இருக்க காலத்தின் சூழ்நிலையால் குறைபாடுகளுடன் பிறந்துவிட்டவர்களின் நிலை இன்னும் சிரமம்தான் இருப்பினும் தனக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து துவண்டுவிடாமல் துணிவுடன் முயன்று வெற்றிபெற்றவர்களும் சிலர் உள்ளனர். உதாரணமாக தமிழகத்தை சேர்ந்த நடிகர் குட்டி என்பவர் தனது ஒரு காலையே இழந்தவர் இருப்பெனும் தனது விடமுயர்த்சியால் நடனம் கற்றுக்கொண்டார். அதன் விளைவாக "டான்சர்" என்ற தமிழ் திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் சிறப்பாக நடித்திருந்தார்.

இவரை தொடர்ந்து தற்பொழுது கலமிறங்கியிருகிறார் கான்பூரை சேர்ந்த நசிர்கான். தான் பிறந்து சில ஆண்டுகளில் கண்பார்வையை முற்றிலும் இழந்துவிட்ட இவர் திரைப்படத்துறையில் சாதிக்க வேண்டும் என்ற ஆவலுடன் மும்பையை நோக்கி வந்தார். சில ஆண்டுகள் பல தெரைப்பட நிறுவனங்களுக்கு சென்று வாய்ப்பு கேட்டார். இருப்பினும் யாரும் இவருக்கு வாய்ப்பு அளிக்க முன்வரவில்லை. விடாமுயற்சியின் முன்னுதாரணமான நசிர்கான் அவரே ரூபாய் 30 கோடி செலவில் "சேடோ" என்ற ஹிந்தி படத்தை இயக்கியத்துடன் தானே அதில் கதாநாயகனாக (இரு வேடங்களில்) நடித்துள்ளார். அவருடன் ஹிந்தி திரைப்பட முன்னனிகளான லிவிங்க்ஸ்டன், சோனாலி குல்கர்னி போன்றவர்கள் நடித்துள்ளபோதும் இந்த படத்தை வாங்க திரைப்பட விநியோகிஸ்தர்கள் முன்வரவில்லை. இந்த நிலையையும் சமாளித்த நசிர்கான் பட விநியோகத்திலும் தானே இறங்கிவிட்டார்.
இந்த சாதனையாளரை பாராட்டுவதுடன் இத்திரைப்படத்தை நாம் அனைவரும் திரையரங்கிற்கு சென்று திரைப்படத்தை கண்டு ரசிப்பதுடன் நசிர்கான் போன்ற சாதனையாளர்களுக்கு ஊக்கம் அளிப்போம் என இந்த இணையதளம் மூலம் நண்பர்களே உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன்.

இப்படிக்கு
R. பாக்கியராஜ்

திரு R. பாக்கியராஜ் பற்றிய விவரக்குறிப்பு
பெயர் : இரா. பாக்கியராஜ்
கல்வித்தகுதி : இளங்கலை வரலாறு
வயது : 25
பெற்றோர் : P. ராஜு, R. அன்புச்செல்வி
முகவரி : கொடியாலம், திருச்சி.

பிற விவரங்கள்:
இளமையிலேயே கண் பார்வை குறைபாடு உடைய நான் பள்ளிக் கல்வியை திருச்சி தேசிய கல்லூரி மேல்நிலைப்பள்ளியில் படித்து முடித்தேன். பிறகு I.T.I புக் பைண்டிங் பிரிவில் பயிற்சி பெற்று தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கி வரும் அரசு கிளை அச்சகம் திருச்சி-15 ல் புக் பைண்டிங் பிரிவில் சேர்ந்து பணியாற்றி வருகின்றேன்.
ஆர்வம்:
நாட்டு நடப்புகளை அறிந்துகொள்வதும் அது சார்ந்த தகவல்களை சேகரிப்பதும் எனக்கு பிடித்தமான ஒரு செயலாகும். தமிழ் இலக்கிய, உரைநடை, ஒலி நாடகங்களை கேட்பதும் ஊனமுற்ற சிலருக்கு இந்திய பார்வையற்றோர் மேம்பாட்டு சங்கம் என்ற அமைப்பில் இணைந்து என்னால் முடிந்த உதவிகளை செய்வதும் எனது கடமையாக செய்து வருகின்றேன். நான் இந்த அளவிற்கு தமிழ் மீதும் நம் நாட்டு மக்கள் மீதும் அக்கறையுடன் நடந்து கொள்ள என்னை துண்டியவர் எனது மரியாதைக்குரிய நண்பர் திரு மணியன் அவர்களாவர். மொழிப்பற்று, நாட்டுப்பற்று உடன் நாம் இருக்கவேண்டும் நம்மால் முடிந்ததை ஊனமுற்றோற்கும் மற்றவர்க்கும் செய்யவேண்டும் என்று கூறியதுடன் தானும் அவரே வாழ்ந்து வருகின்றார். அவரை முன்னுதாரணமாக கொண்டு செயல்பட்டு வருகின்றேன்.
வாழ்க பாரதம்.